India Budget 2023 Explained
கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி இந்தியாவின் பட்ஜெட்டை இந்திய பினான்ஸ் மினிஸ்டர் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்கள் இதோடு ஐந்தாவது முறையாக இந்தியாவின் பட்ஜெட்டை வெளியிட்ட போது அது ஒரு மணி நேரம் மற்றும் 22 நிமிடங்களில் குறைந்த அளவில் முடியப்பட்டுள்ளது
இவ்வளவு குறைந்த நேரத்தில் இந்தியாவின் பட்ஜெட்டை எவ்வாறு போட்டீர்கள் என்று எதிர்க்கட்சிகளும் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து பொதுமக்களும் சரமாரியாக கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்
அதோடு மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியின் தலைவராக இருக்கின்ற ராகுல் காந்தி அவர்கள் இந்தியா அடுத்த வளர்ச்சியை ஏன் இன்னும் செல்லாமல் இருக்கிறது என்பதற்கு இந்த பட்ஜெட் ஒரு உதாரணம் என்று கூறியிருக்கிறார்
அதோடு மட்டுமல்லாமல் ஒரு சதவீத மக்கள் 40% இந்தியாவின் பணக்காரராகவும், 50 சதவீதம் மக்கள் 65 சதவீதத்திற்கும் மேலாக ஜிஎஸ்டி வரி கட்டிக் கொண்டிருப்பதாகவும் வேலையில்லா திண்டாட்டத்தில் மக்கள் அதிகமான கஷ்டப்படுகிறார்கள் அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் நீங்கள் என்ன பட்ஜெட் போட்டு இருக்கிறீர்கள் என்று எதிர் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்
சரி இப்பொழுது இந்தியாவில் போடப்பட்டுள்ள பட்ஜெட்டை பற்றி ஒரு விளக்கமான கட்டுரையை பார்க்கலாம்
இந்தியாவின் தற்காப்பு படைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவு 5.94 லட்சம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது
மினிஸ்ட்ரி ஆப் ரோடு ட்ரான்ஸ்போர்ட் 2.70 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
இந்தியன் ரயில்வே திட்டத்திற்காக 2.41 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
இந்த மூன்று திட்டங்களும் இந்தியாவில் போடப்பட்ட பட்ஜெட்டுகளில் மிகவும் அதிக தொகைக்காக கணக்கிடப்படுகிறது
முக்கியமாக இந்தியாவின் பாதுகாப்பு என்பது அண்டை நாடுகளிடத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மற்றும் இந்தியாவின் ராணுவ சக்தியை அதிகரிக்க, மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு என்பது அத்தியாவசிய தேவையாக இருப்பதால் அதற்காக அதிக தொகை ஒதுக்கிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாக இருக்கிறது
இந்தியாவின் ரயில்வே துறையை அதிகரிப்பதற்காக இதுவரை இல்லாத அளவிற்கு அதிகப்படியாக 2.40 லட்சம் கோடிகளை இந்தியன் ரயில்வே துறைக்காக கொடுக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்படுகிறது
இது இந்தியாவில் உள்ள அதிகமான மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் இந்தியன் ரயில்வே துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சி என்றும் கூறப்படுகிறது.
மற்றும் அதைத்தொடர்ந்து போடப்பட்டுள்ள அனைத்து பட்ஜெட்டுகளிலும் மாத சம்பளம் வாங்கும் மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு ஏற்றதாக இல்லை என்பது போல் கணக்கெடுக்கப்படுகிறது
உதாரணத்திற்கு ஏற்கனவே இருந்த மூன்று லட்ச ரூபாய் சம்பாத்தியத்தில் இருந்து இப்பொழுது 7 லட்சம் ரூபாய் வரைக்கும் நீங்கள் டேக்ஸ் ஏதும் கட்ட வேண்டிய தேவை இல்லை என்பது போல் வரையறுக்கப்படுகிறது
ஆனால் இந்த ஏழு லட்சம் மதிப்பில் அதிகமான விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது அவை அனைத்தையும் விரிவாக ஆராயும் பொழுது மூன்று லட்சத்திலிருந்து இன்கம் டேக்ஸ் கட்ட வேண்டிய நிலைக்கு அனைவரும் தள்ளப்படுகிறார்கள் என்பது தான் உண்மையாக இருக்கிறது.
இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யக்கூடிய சிகரெட்டுகள் ஜுவல்லரிகள் தங்கம் வெள்ளி மற்றும் சமையல் சம்பந்தமான உபகரணங்கள், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய பொம்மைகள் சைக்கிள் இருசக்கர வாகனங்களாக இருக்கக்கூடிய பைக் எலக்ட்ரானிக் கார்ஸ் எலக்ட்ரானிக் பைக் இவை அனைத்திற்கும் அதிகமான வரிகள் கட்ட வேண்டியது இருக்கும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய அநேக பொருள்களுக்கு வரியை அதிகரிப்பதன் மூலம் அந்த பொருட்கள் அனைத்தையும் இந்தியாவிலேயே தயாரிக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே இதனுடைய ஒரே குறிகளாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற மொபைல் போன் மற்றும் டிவி போன்ற எலக்ட்ரானிக் ஐட்டம் அனைத்திற்கும் வரி சுமைகள் குறைக்கப்படுவதாகவும் அவற்றின் விலையை உற்பத்தியாளர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பது போல் அறிவிக்கப்படுகிறது
உதாரணத்திற்கு மின்சாரத்தால் இயங்கப்படக்கூடிய வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இவை அனைத்தும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்து இந்தியாவிற்குள் விற்பனை செய்தால் அதனுடைய வரி சுமை மிகவும் குறைக்கப்பட்டு அனைத்து மக்களும் உபயோகப்படுத்தும் வண்ணம் இருக்கும் என்பது போல அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இவற்றைத் தொடர்ந்து சிட்டியில் வாழும் ஏழை மக்களுக்கும் வீடு கட்டி தரப்படும் என்பதற்காக ஒரு வித்தியாசமான திட்டத்தை அறிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு இந்தியா தன்னுடைய திட்டங்கள் அனைத்தையும் 1.22 நிமிடங்களில் இந்தியாவின் மொத்த பட்ஜெட்டையும் முடித்து கொண்டதால் இன்னும் அதிகமான பட்ஜெட்டுகள் போடப்படாமல் மற்றும் அதிகமான சேவைகள் நிலுவையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்
அதோடு மட்டுமல்லாமல் இவை அனைத்திலும் தமிழ்நாடு எந்த பட்ஜெட்டில் இடம் பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது
கடந்த ஆண்டு போடப்பட்ட பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் மதுரையில் எய்ம்ஸ் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது ஆனால் இந்த வருடம் ஆகியும் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிக் கொடுக்கப்படாமல் அதற்கான எந்த ஒரு முயற்சியும் இல்லாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறது என்று தான் ஒரு நிதர்சனமான உண்மை.