Online Purchase Delivery Big Scam Tamil
சமீப காலமாக ஆன்லைனில் ஆர்டர் செய்கின்ற அதிகமான பொருட்கள் தவறாகவும் மற்றும் உடைந்த பொருள்கள் மற்றும் காலாவதியான பொருட்களை டெலிவரி செய்து விடுவார்கள் என அதிகமான கம்பளைண்ட்கள் வந்து கொண்டே இருக்கிறது
முக்கியமாக இந்தியாவில் மிகச்சிறந்த நடிகராக இருக்கக்கூடிய முக்கிய பிரபல ஒருவர் iphone வாங்கும் பொழுது அதற்கு பதிலாக உள்ளே செங்கல் இருந்ததை அவர் அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்
இப்படிப்பட்ட முக்கிய பிரபலத்திற்கு இப்படிப்பட்ட கொடுமை நடக்கிறது என்றால் சாமானிய மக்கள் எத்தனை நபர்கள் இவ்வாறு அதிகமான ஏமாற்றும் வேலைகளை ஒவ்வொரு நாளும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
இதற்கு முக்கிய காரணம் கம்பெனியா அல்லது அங்கு வேலை பார்க்கின்ற நபர்களா என்று அனைத்தும் தெரியவில்லை ஆனால் இதைப் பற்றி அவர்கள் அந்த நிறுவனத்திடம் கூறும் பொழுது அவர்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் வாடிக்கையாளர்களை அலைய விடுவதும் பெரிய வருகிறது
முக்கியமாக தன்னுடைய நிறுவனத்தில் இருந்து பொருட்கள் யாரேனும் வாங்கி அது தவறாக செய்யப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு முழுவதும் அந்த கம்பெனிதான் பொறுப்பாக வேண்டும் ஆனால் அந்த கம்பெனி அவ்வாறு எந்த பொறுப்புகளையும் ஏற்காமல் நீங்கள் சர்வீஸ் சென்டருக்கு செல்லுங்கள் என்று கூறுவது தவறு
ஏனென்றால் வாங்கிய உடனே பொருட்கள் தவறு என்பதால் ஏழு நாட்கள் வரை கால அவகாசங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் ஆனால் அந்த நிறுவனம் அதையும் பொடுத்தாமல் நீங்கள் சர்வீஸ் சென்டருக்கு செல்லுங்கள் என்று கூறி வாடிக்கையாளர்களை அழைத்து வருகிறது என்பது இப்பொழுது தெளிவாக இருக்கிறது
தமிழ்நாட்டின் பிரபல யு டிபராக இருப்பவர் மதன் கௌரி இவருடைய சந்தாதார ஒருவர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு உதவுங்கள் நான் டெல் மானிட்டர் 42 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன் அதை பிலிப்கார்ட் என்று நிறுவனத்தில் வாங்கினேன்
ஆனால் அவர்கள் டெலிவரி செய்தவுடன் அதனால் ஓபன் செய்து பார்க்காமல் காலேஜுக்கு சென்று விட்டேன் திருப்பி மாலை நேரத்தில் வந்து அதை ஓபன் செய்து பார்க்கும் பொழுது உள்ளே புதிய லேப்டாப்புக்கு பதிலாக பழைய லேப்டாப்பும் நான் ஆர்டர் செய்த 16 ஜிபிக்கு பதிலாக இரண்டு ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஒரு ஏமாற்று வேலையுடன் முழுவதுமாக இருந்த லேப்டாப்பை பார்த்தேன்
ஏனென்றால் நான் ஆராய்சித லேப்டாப்பின் விலை 42 ஆயிரம் ரூபாய் அதனுடைய முழு பசிபிகேஷன் வேறு
ஆனால் எனக்கு அனுப்பப்பட்டதோ வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு இருக்கின்ற இரண்டு ஜிபி ரேம் கொண்ட லேப்டாப்
அப்படி என்றால் இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது, அதனால் இது உடனடியாக மாற்றி தர வேண்டும் என்று ஃப்லிப்கார்ட் நிறுவனத்திடம் கஸ்டமர் சப்போர்ட்டில் சென்று கூறியுள்ளான் அந்த சந்ததாரர்
ஆனால் பிளிப்கார்ட் நிறுவனத்தில் கஸ்டமர் சப்போர்ட் செய்கின்ற நபர்களோ இது எங்கள் மீது எந்த தவறும் கிடையாது நீங்கள் சர்வீஸ் சென்டருக்கு செல்லுங்கள் என்று சர்வீஸ் சென்டரை நம்பரை எடுத்துக் கொடுத்துள்ளார்
இதனால் தான் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அந்த நபர் பிரபலமான யூடியூப்பர் மதன் கௌரிக்கு இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார்
இதை முன்பு படித்துப் பார்த்துவிட்டு அவருடைய மொபைல் எண்ணிற்கு ஃபோன் செய்து மதன் கௌரி முழுவதும் விசாரித்திருக்கிறார் அப்பொழுதுதான் உண்மை தெரிய வந்திருக்கிறது flipkart நிறுவனம் ஏமாற்று வேலையை செய்து இருக்கிறது என்பதை
உடனடியாக இதைப் பற்றி ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளார் மதன் கௌரி, தனியாக சென்று ஹெல்ப் சென்டரில் ஹெல்ப் கேட்கும்போது உதவி செய்யாத பிளிப்கார்ட் நிறுவனம் பொது வெளியில் ட்விட்டரில் வந்து உண்மை விஷயங்களை கூறும் பொழுது நாங்கள் இதற்காக வருந்துகிறோம் இனிமேல் இதேபோல் தவறு செய்யமாட்டோம் உடனடியாக அதை திருப்பிக் கொள்கிறோம் என்று ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த விஷயங்கள் அனைத்தையும் பிரபல யூடியூபரும் மதன் கௌரி அவருடைய யூடியூப் சேனலில் அனைத்தையும் முழுவதுமாக முழு ஆதாரத்துடன் வீடியோவாக பதிவேற்றியுள்ளார்
இதிலிருந்து தெரிகிறது என்னவென்றால் தவறுகள் நடக்கத்தான் செய்யும் ஆனால் இந்த தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டியது அந்த நிறுவனம் ஏன் அந்த தவறுகளை திருத்திக் கொள்ளாமல் பொதுவெளியில் வந்தவுடன் நாங்கள் திருத்திக் கொள்கிறோம் உடனடியாக அதை செய்கிறோம் என்று கூறுவது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது
தவறு நடந்திருக்கிறது என்பதை ஹெல்ப் சென்டரில் சென்று கேட்கும் பொழுது ஏன் அவர்கள் உதவ மாட்டார்கள் என்பது தான் தெரியவில்லை
இதே போல் அமேசான் பிளிப்கார்ட் என டெலிவரி செய்யக்கூடிய அனைத்து நிறுவனங்களிலும் இதே போல் தவறுகள் அடிக்கடி நடந்து கொண்டே தான் இருக்கிறது
இவற்றை அனைத்தையும் தவறு நடக்க விடாமல் அந்நிறுவனம் பார்க்க வேண்டும் என்று இந்த வீடியோவின் மூலம் மதன் கௌரி தெரிவித்துள்ளார்.
முக்கியமாக ஆன்லைன் ஷாப்பிங்கில் நடக்கின்ற திருட்டு வேலைகளுக்கு அந்த நிறுவனங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பதை தெரியவில்லை
ஏனென்றால் அந்த நிறுவனத்தின் மொபைல் ஆப்புகளில் நாம் ஆர்டர் செய்யும் போது அவை அனைத்தும் சரியான முறையில் இருக்கிறது
இறுதியில் நமக்கு டெலிவரி வரும் போது மட்டும் அதில் ஏதோ ஒரு படி ஆகிறது
அதனால் இதில் டெலிவரி செய்யும் டெலிவரி நான் மற்றும் டெலிவரி கொடுக்கும் அந்த நிறுவனத்தின் வேலை செய்கின்ற மனிதர்கள் அவர்கள் மேல் ஏதேனும் தவறு இருக்குமோ என்பது போல் மதன் கௌரி சந்தேகப்படுகிறார்
ஏனென்றால் ஆரம்ப காலத்தில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இந்தியாவிற்குள் வரும்போது அதிகமான ஆஃபர்களை கொடுத்து அதிகமான மக்கள் தங்கள் இடத்தில் இருந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்கு அமேசான் மற்றும் பிலிப்கார்டு இரண்டும் போட்டி போட்டு அவர்களை அள்ளி அள்ளி கொடுத்தது
ஆனால் இப்பொழுது மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமாக வளர்ந்த பின்பு எவ்வாறு தங்களுடைய வாடிக்கையாளர்களை கவனித்துக் கொள்ளாமல் ஏளனமாக கருதுகிறது
அதோடு மட்டுமில்லாமல் பொது வெளியில் அதாவது twitter போன்ற பகுதிகளில் மிகப்பெரிய நபர்கள் அதிகமான பாலோவர்கள் இருக்கக்கூடியவர்கள் இதை வெளியில் சொல்லும் போது உடனடியாக அதை கவனித்து இதை நாங்கள் உடனடியாக திருத்திக் கொள்கிறோம் இது எங்கள் மீது உள்ள தவறு தான் இனிமேல் இதை போன்ற தவறுகள் நடக்காது இந்த தவறுக்கு நாங்கள் வருந்துகிறோம் என்பது போல் அந்த நிறுவனம் கூறுகிறது இது அனைத்து வாடிக்கையாளர்களிடத்திலும் பொது வெளியில் இதே போல் தான் கூறிக் கொண்டிருக்கிறது
ஆனால் அவரிடத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட நபர் சென்று பேசும் போது இவ்வாறு பேசாமல் எங்களால் அதை செய்ய முடியாது நீங்கள் சர்வீஸ் சென்டருக்கு போய் உங்களுடைய பிரச்சினைகளை முடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறது இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை
அதனால் மிக அதிக தொகை உள்ள பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும், இல்லையென்றால் அதில் ஏதேனும் சிறிய சிக்கல் இருந்தால் அதற்கு அந்த நிறுவனம் இவ்வாறு பொறுப்பேற்காமல் செல்கிறது iphone மிகவும் விலை உயர்ந்த லேப்டாப் போன்றவற்றை எவ்வாறு இனிமேல் ஆன்லைனில் மக்கள் ஆர்டர் செய்வார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது
ஏனென்றால் அமேசான் மற்றும் பிளிப்காட் இவை இரண்டும் உலகம் முழுவதிலும் இருக்கிறது
ஆனால் இந்த நிறுவனங்களின் சேவை மற்றும் ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறது இப்படி இருந்தால் சீக்கிரத்தில் தங்களுடைய வாடிக்கையாளர்களை அந்த நிறுவனம் இழந்து விடும் என்பதுதான் உண்மையான விஷயம்.