Pakistan Breaking! | Tamil News
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் தற்பொழுது எந்த நேரத்திலும் திவால் ஆகலாம் என்கின்ற நிலையில் இருக்கிறது
ஒரு சில மாதங்களுக்கு முன்பு இலங்கை நாடும் திவால் ஆகி தன்னிடத்தில் அன்னிய செலவாணி எதுவும் இல்லை என்று மிகவும் கடனுக்குள் தள்ளப்பட்டு சைனா போன்ற நாடுகளுக்கு தங்களுடைய துறைமுகங்களை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு கொடுத்துள்ளது
இதனால் இலங்கைக்கு சைனா கப்பல்கள் வந்தது என்றால் இந்தியாவுக்கு ஏதேனும் ஆதலால் சிக்கல் ஏற்படும் என்று இந்தியாவும் இலங்கைக்கும் உதவி செய்யும் வகையில் அதிகமான உதவிகளை செய்து சைனா இலங்கைக்கு வராத வண்ணம் பாதுகாத்து வந்தது
ஆனால் இலங்கையை அரசாங்கம் தங்களுடைய நாட்டில் எந்தவிதமான பொருளாதாரமும் இல்லை என்று சொல்லி அதிகமான கடன்களை சைனாவிடத்திலிருந்து வாங்கியதால் வேறு வழியில்லாமல் இப்பொழுது சைனா இலங்கையை நோக்கி தங்களுடைய கப்பல்களை அனுப்பி கொண்டிருக்கிறது
இந்த சமயத்தில் பாகிஸ்தானும் எந்த நேரத்திலும் திவால் ஆகலாம் என்கின்ற நிலையில் தன்னிடத்தில் அன்னிய செலவாணி எதுவும் இல்லை என்று கைவிரித்துள்ளது
அண்டை நாடுகள் நட்பு நாடுகள் பணக்காரன் நாடுகள் என அனைத்து நாடுகளிடத்திலும் கடன் வாங்கி அந்நாடு அதிகமான கடனுக்குள் உள்ளாக்கப்பட்டுள்ளது
மற்றும் பாகிஸ்தானின் அரசியலமைப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது
ஏனென்றால் அந்நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரைக்கும் 30 அரசியல் தலைவர்களை கண்டுள்ளது
ஆனால் அந்த 30 அரசியல் தலைவர்களும் தங்களுடைய முழு அரசியல் ஆண்டுகள் முடியும் வரை யாரும் ஆட்சி செய்ததே கிடையாது அவர்கள் பாதி காலம் முடிவதற்கு முன்பாகவே அந்நாட்டின் ராணுவம் அவர்களை தூக்கிக்கொண்டு அந்த பதவியில் இருந்து அவர்களை விலக்கி விடுகிறது
இதனால் அந்த நாட்டில் யாரும் முதலீடுகளை போட்டு தொழில் செய்ய விரும்புவதில்லை
ஏனென்றால் உலக நாடுகள் அனைத்தும் மனிதர்களை எவ்வாறு நிலாவுக்கு அனுப்பலாம் என்று யோசித்தும் கொண்டிருக்கிறது அதற்காக அதிகமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறது
ஆனால் பாகிஸ்தான் நாடோ இந்தியாவிற்குள் எப்படி அந்நியர்களை ஊடுருவ செய்வது என்று சொல்லி தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறது
தங்களுடைய நாட்டை எவ்வாறு முன்னேற்ற வேண்டும் என்கின்ற பாதையில் கொண்டு செல்லாமல் முழுவதும் தவறான போக்குவரத்து காரணமாக அந்நாடு இப்பொழுது திவால் ஆகப் பட்டுள்ளது
பெட்ரோல் விலை நான்கு மடங்கு அதிகமாகப் பட்டுள்ளது மற்றும் அந்நிய செலவாணி கையில் இல்லாத காரணத்தால் உலக அமைப்பான IMF அவர்களிடத்தில் கடன் கேட்டுள்ள பாகிஸ்தான் நீங்கள் எங்களுடைய விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்காத காரணத்தால் உங்களுக்கு முதலாவது நாங்கள் எந்தவிதமான கடனும் தர முடியாது என்று கூறியுள்ளது
நாங்கள் சொல்லும் விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடித்தால் மட்டுமே கடன் பெறுவோம் என்று அந்த IMF கூறியுள்ளது
மற்றும் பாகிஸ்தான் நாடு முழுவதும் மின்சாரம் என்பது இப்பொழுது தடைபட்டுள்ளது
அந்த நாட்டில் உள்ள மால் தியேட்டர் போன்ற மிகப்பெரிய பில்டிங்கில் இருக்கக்கூடிய பொருட்கள் விற்பனை மையங்கள் அனைத்தும் இரவு எட்டு மணிக்கு மேல் கடைகள் திறக்க அனுமதி இல்லை என்று அனைத்தையும் மூட அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது
ஏனென்றால் அந்த மிகப்பெரிய விற்பனை நிலையங்களில் அதிகமான மின்சாரங்கள் செலவு செய்யப்படுவதால் வீட்டிற்கு மின்சாரம் கொடுப்பதற்கு தேவையான மின்சாரம் இல்லாத காரணத்தால் இரவு நேரம் 8 மணிக்குள் அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது
மற்றும் அந்நாட்டின் பண வீக்கம் என்பது 25% எட்டி உள்ளது
இவ்வாறு பணவீக்கம் அதிகமாகவும் இருக்கிறது மற்றும் தொழில் செய்வதற்கு யாரும் அந்நாட்டில் அதிகமான முதலீடுகளை செய்யாத காரணத்தாலும் இப்பொழுது மிகப்பெரிய பணக்கஷ்டத்தில் பாகிஸ்தான் இருக்கிறது
இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் அவர்களுடைய நாடு இவ்வாறு திவாலாவதற்கு காரணம் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு படை பிரிவினர் இவர்கள்தான் காரணம் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கூறி வருகிறது
தற்பொழுது அந்நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கான் என்பவரை அந்நாட்டு ராணுவம் வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது
ஒரு மிகச்சிறந்த ஆளுமையாக இருந்த இம்ரான் கான் தற்பொழுது அந்நாட்டு பிரதமராக இருந்து பதவி நீக்கப்பட்டுள்ளதால் அவரை ஐந்து ஆண்டுகள் தேர்தலில் நிற்கக்கூடாது எனவும் அந்நாட்டு அரசாங்கம் தடை போட்டுள்ளது இவ்வாறு ஒரு மிகச்சிறந்த தலைவர்கள் முன்னோக்கி வரும் பொழுது அவர்களை அந்நாட்டு எதிர்க்கட்சிகளே அவர்களை முட்டுக்கட்டை போட்டு முடக்கி விடுகிறார்கள்
இதனால் அந்நாட்டின் வளர்ச்சி என்பது சரியான தலைவர்கள் கையில் இல்லாத காரணத்தால் எவ்வாறு செல்கிறது என்பது தெரியாமல் இருக்கின்ற அனைத்து பணங்களையும் இழந்து இப்பொழுது திவாலாகும் நிலையில் நிற்கிறது
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தற்போது அந்நாட்டில் அன்னிய செலவாணி கையில் இல்லை மற்றும் அந்நாட்டிற்கு கடன் கொடுக்க எந்த நாடுகளும் முன்வரவும் இல்லை
ஏற்கனவே கடன் கொடுத்த சைனா ரஷ்யா போன்ற நாடுகள் தங்களுடைய கடனை திருப்பி கேட்கவும் முன் வருகிறது
இல்லையென்றால் சைனா போன்ற நாடுகள் உங்களுடைய நாட்டை எங்களுக்கு எழுதி தாருங்கள் என்கின்ற அளவில் வந்து நிற்கும் ஏற்கனவே இலங்கையில் அவ்வாறு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது
அதனால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் பாகிஸ்தான் திவால் ஆகும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்