Prabhakaran Alive | Tamil News
தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருக்கிறார்- பழ.நெடுமாறன் பரபர அறிவிப்பு
தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கிறார் என்கின்ற செய்தி மிகவும் வைரலாக வந்து கொண்டிருக்கிறது
இதை அறிவித்த நெடுமாறன் என்பவர் உலகத் தமிழர் தலைவராக இருக்கிறார்
இவர் ஏன் இவ்வாறு கூறினார் அது உண்மைதானா உண்மையிலேயே பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறாரா என்கின்ற முழு விவரங்களையும் இப்பொழுது பார்க்கலாம்
யார் இந்த பழ.நெடுமாறன்
காமராஜர் வாழ்ந்த காலத்தில் காமராஜருக்கு மிகவும் நெருக்கமான மற்றும் தமிழர்களை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் தமிழ்நாட்டை நல்ல முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்று அயராது பாடுபட்ட நபர்
இந்திரா காந்தி தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் போது அதிகமான நபர்களால் தமிழ்நாட்டில் இந்திரா காந்தி தாக்கப்பட்டார்
அந்த சமயத்தில் இந்திரா காந்தியை காப்பாற்ற வேண்டும் அவர் நாட்டிற்கு தேவை என நினைத்து அதிகமான காயங்களை இந்திரா காந்திக்கு பதிலாக தன்னுடைய நெஞ்சில் வாங்கியவர் தான் இந்த நெடுமாறன்
உண்மையாக தமிழ்நாட்டை நேசித்தவர் தமிழ் மக்களுக்காக அதிகமாக சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தவர்
இவை அனைத்தும் இந்திரா காந்திக்கு சென்றவுடன் அவர்கள் நெடுமாறனை அழைத்து நீங்கள் டெல்லிக்கு வந்து விடுங்கள் உங்களை எங்களுடைய தலைவர்கள் பொறுப்பில் உங்களுக்கு ஒரு சிறந்த பொறுப்பை தருகிறோம் என்று கூறினார்கள்
ஆனால் நெடுமாறனும் எனக்கு அது தேவை கிடையாது நான் தமிழ்நாட்டிற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தான் வாழ்கிறேன் நான் இங்கே தான் இருப்பேன் தமிழ்நாட்டுக்காக தான் வாழ்வேன் என்று கூறியவர்
அதனால் தான் அவர் நெடுமாறன் உலகத்தில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களுக்கும் தலைவராக திகழ்கிறார்
இப்படிப்பட்ட இந்த நெடுமாறன் இப்படிப்பட்ட வார்த்தைகள் கூறுவது உண்மையா இல்லையா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது
அதோடு மட்டுமல்லாமல் இவர் இதற்கு முன்பும் அனேக நேரங்களில் இதையே வார்த்தைகளை ஒவ்வொரு இடத்திலும் கூறிக்கொண்டு தான் இருக்கிறார்
முக்கியமாக 2013 ஆம் ஆண்டில் இவர் கூறும் பொழுது ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சற்று இதை கூறினார்
அதேபோல் 2016 ஆம் ஆண்டும் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இவ்வாறு கூறினார்
ஆனால் தற்பொழுது அவர் கூறும் பொழுது தனியாக பத்திரிகையாளர்களை அனைவரையும் அழைத்து கூட்டிக் கொண்டு வந்து பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறியது தான் இப்பொழுது வியப்புக்குள்ளாயிற்று மற்றும் அதிகமாக மக்களால் பேசப்பட்டு விட்டது.
2011 ஆம் ஆண்டு ஒருமுறை இதே போல் ஒரு வதந்தி கிளம்பியது அதாவது தலைவர் பிரபாகரன் அவர்கள் இப்பொழுது உயிரோடுதான் இருக்கிறார் வெகு விரைவில் அவர் வெளியே வருவார் நாங்கள் அவரை மறைவாக வைத்திருக்கிறோம் என்று ஒரு வதந்தி கிளம்பியது அதைத் தொடர்ந்து 2013 மற்றும் 2016 ஆம் ஆண்டும் இதே போல வதந்தி கிளம்பி கொண்டே இருந்தது
ஆனால் அந்த செய்தியை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்பதால் அது சிறிய வதந்தியாக போய்விட்டது அதைப் பற்றி தெரிந்தால் யாரும் பேசவில்லை
ஆனால் உலக தேசிய தலைவர் நெடுமாறன் என்பவர் இந்த 2023 ஆம் ஆண்டும் பிரபாகரன் அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார் என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அனைத்து மக்களிடத்திலும் வைரலாகி பேசப்பட்டு கொண்டிருக்கிறது
உண்மையிலேயே அவர் உயிரோடுதான் இருப்பாரா என்பதற்கு அறிவியல் ரீதியாக பார்க்க வேண்டும் என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்
ஏனென்றால் அவருக்கு தற்பொழுது வயது 65 லிருந்து 75 வயதுக்குள்ளாக இருக்கக்கூடும் ஆனால் அவரால் நிச்சயம் உயிர் வாழ முடியும்
மற்றும் இதே வயதிற்குள் தமிழகத்தின் முதல்வரான ஸ்டாலின் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மற்றும் எதிர்க்கட்சியின் தலைவராய் இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமிக்கும் இதே வயது தான் இவர்கள் மூவருக்கும் ஒரே வயதாக இருக்கிறது மற்றும் ஒரு சில வயதுகள் வித்தியாசத்துடன் 10 வருட வித்தியாசத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
அதனால் வயது ரீதியாக பார்க்கும் பொழுது அவரால் நிச்சயம் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கலாம் என்று எண்ணலாம் ஆனால் இந்த செய்தியை தற்போது வைரலாக வந்ததால் இலங்கை அரசாங்கம் கையில் எடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது
இவ்வாறு வதந்திகளை நீங்கள் பரப்ப வேண்டாம் அவர் இறந்ததற்கான முழு ஆதாரம் மற்றும் அவருடைய டி என் ஏ டெஸ்ட் எல்லாம் எங்களிடத்தில் சரியாக இருக்கிறது அதை இப்பொழுது நாங்கள் காட்ட வேண்டும் என்று ஆனாலும் நீதிமன்றத்தில் காட்ட தயாராக இருக்கிறோம் அதனால் உண்மை தன்மையை அறிந்து விட்டு நீங்கள் அறிக்கையை சொல்ல வேண்டும் தவறான அறிக்கையை கூறக்கூடாது என்று சொல்லி உள்ளது இலங்கை அரசாங்கம்
அறிவியல் ரீதியாக டிஎன்ஏ டெஸ்ட் எல்லாம் இருக்கிறது என்று இலங்கை அரசாங்கம் கூறியவுடன் மற்றும் எந்த ஒரு சான்றும் இல்லாமல் அவர் உயிரோடு தான் இருக்கிறார் என்று கூறும்பொழுது எவ்வாறு நம்புவது என்பதுதான் உண்மை
அவர் உண்மையிலேயே உயிரோடு இருக்கிறார் என்றால் அவரைப் பற்றிய நம்பக்கூடிய வகையில் தகவலை வெளியிட வேண்டும் ஆனால் அவ்வாறு தகவலை வெளியிடாமல் அவர் விரைவில் வெளியே வருவார் என்பது போல் தகவலை வெளியிட்டவர்கள் என்றால் அதை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை
மற்றும் இலங்கையில் போர் நடந்து 15 வருடமாக போகிறது இவ்வளவு வருடமாக இப்படி ஒரு மனிதரால் வெளியில் தலை காட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும் மற்றும் அவர் மிகப்பெரிய ஒரு தலைவராக இருந்திருக்கிறார் மற்றும் தமிழ் தேசியத்திற்கும் அவர் தலைவராக இருந்திருக்கிறார் அவர் எப்படி தலையை வெளியே காட்டாமல் இருப்பார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது
இதைப் பற்றி தமிழ் தேசியவாதி பாரிசாலன் கூறுகையில் இந்தியா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளுக்கு இப்பொழுது பிரபாகரன் தேவைப்படுகிறார் மற்றும் அவரைப் பற்றிய வதந்திகளும் தேவைப்படுகிறது
ஏனென்றால் அவர் இப்பொழுது உயிரோடு இருந்திருந்தால் இலங்கையை, சைனா முழுவதும் ஆக்கிரமித்து இருக்காது, அவர் சரியான முறையில் அதை பாதுகாத்து அனைத்தையும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்
அவர் இப்பொழுது இல்லாத காரணத்தால் இலங்கையில் முழுவதும் சைனா ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது மற்றும் சைனாவில் இருந்து அனைத்து கப்பல்களும் இப்பொழுது இலங்கை நோக்கி வந்து கொண்டிருக்கிறது இது இந்திய பெருங்கடலுக்கு மிகப்பெரிய ஆபத்து இந்தியாவுக்கும் ஆபத்து என்கின்ற அளவில் இருக்கிறது
இந்த ஆபத்தை சமாளிக்க வேண்டும் என்றால் தலைவராக இருந்த பிரபாகரனை பற்றி பேசிய ஆக வேண்டும், அவ்வாறு பேசவில்லை என்றால் சைனாவால் நமக்கு அவ்வப்போது ஏதேனும் சீண்டல்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும் என்பதால் இந்தியா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளின் கூட்டு சதி தான் இந்த பேச்சு என்று தமிழ் தேசியவாதிகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்
இவ்வாறு தமிழ் தேசியவாதிகள் ஒரு பக்கம் ஒவ்வொரு விமர்சனத்தை வைத்தாலும் அவர் உயிரோடுதான் இருக்காரா என்பதற்கான முழு ஆதாரத்தோடு வெளியிட்டால் மட்டுமே மக்கள் முழுவதுமாக நம்புவார்கள் என்பது தான் உண்மை